/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ ரங்கநாதர் கோவில் கும்பாபிேஷகம்
/
ஸ்ரீ ரங்கநாதர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஆக 20, 2025 09:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; குறிஞ்சேரியில் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிேஷகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலை அருகே குறிஞ்சேரியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஸ்ரீ ரங்கநாத சுவாமி, கருடன், ஹனுமார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த, 18ம் தேதி மகா சுதர்சன ேஹாமத்துடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. மூன்று காலை பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்று காலை, காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள், 'கோவிந்தா கோவிந்தா' 'ஓம் நமோ நாராயணா', 'ஸ்ரீ ரங்கநாதா' என பக்தி கோஷத்துடன் கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கினர்.