ADDED : ஏப் 25, 2025 08:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர்,  பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப், ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனத்தில், ஸ்ரீசத்ய சாய் பாபா ஆராதனை மகோத்சவம் நடந்தது.காலையில் சாய் பஜன்கள் பாடப்பட்டன. பெண்கள் ஒன்றிணைந்து, 2,000 பேருக்கு உணவு தயாரித்து, நாராயண சேவை செய்தனர். மாலை,  வேத பாராயணம், சாய் பஜன்களை தொடர்ந்து, பால விகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பின்னர் 'இன்றைய கல்வி அறிவை வளர்க்கிறதா... அன்பை வளர்க்கிறதா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.  பின், ஸ்ரீ சத்ய பாபாவின், நுாறாவது பிறந்த தின விழா நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சிகளை, ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனத்தில் திருப்பூர் மாவட்ட தலைவர் மற்றும் அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.

