/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
/
ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 22, 2024 12:37 AM

அவிநாசி;அவிநாசி அருகே, பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம், திருப்பூர் ரோட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த, 19ம் தேதி மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் தீபாராதனையுடன் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 20ம் தேதி புண்யாஹவாசனம், சூரிய பூஜை, மூல மந்திர ஹோமங்கள், வேதபாராயணங்கள் ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் நாடி சந்தனம், யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்று, விஸ்வநாத சிவாச்சாரியார், ரத்னாஜல சிவாச்சாரியார், நல்ல சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் முன்னிலையில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோபுர கலசம் மற்றும் மூலவருக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின், தச தானம், தச தரிசனம், மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாக கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.