/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத்தேர்வு மாணவருக்காக ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு
/
பொதுத்தேர்வு மாணவருக்காக ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு
பொதுத்தேர்வு மாணவருக்காக ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு
பொதுத்தேர்வு மாணவருக்காக ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு
ADDED : பிப் 17, 2025 11:27 PM
திருப்பூர்; பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் கருதி, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், யாகபூஜையும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது.
வரும், 23 மற்றும் மார்ச், 2ம் தேதிகளில், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோருக்கு, மார்ச் 9 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறும்.
திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது:
காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாத்துமறை, மகாதீபாராதனை, மதியம் 12:00 மணிக்கு பிரசாதம் வினியோகம் நடக்கிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு நடத்தப்படுகிறது.
தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு, பொதுத்தேர்வில் சாதனை படைக்க வேண்டுமென, இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்படும். மாணவ, மாணவியர், பெயர் மற்றும் நட்சத்திரத்துடன் முன்பதிவு செய்துகொள்ளலாம்; யாக வேள்வியில் அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

