ADDED : ஜூலை 17, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ஸ்ரீ ராமய்யர் கல்யாண மண்டபத்தில், வரும், 20ம் தேதி, ஸ்ரீமத் பாகவதம் ஆன்மிக சொற்பொழிவு துவங்கி, 26ம் தேதி நிறைவு பெறுகிறது.
உடுமலை 'நாமத்வார்' சார்பில், இந்நிகழ்ச்சியை ஸ்ரீ வத்ஸ் கிருஷ்ணா பாகவதர் நடத்துகிறார். வரும் 20ம் தேதி, பாகவத மாஹாத்மியம், 21ம் தேதி குந்தி ஸ்துதி, பீஷ்ம ஸ்துதி, 22ம் தேதி துருவ சரித்ரம், 23ம் தேதி அஜாமிள சரித்திரம், தொடர்ந்து ப்ரஹ்லாத சரித்திரம், ஸ்ரீ கிருஷ்ண ஜனனம், பால லீலைக்கு பிறகு, 26ம் தேதி ருக்மணி கல்யாணம் உள்ளிட்ட தலைப்புகளில், சொற்பொழிவு நடக்கிறது. மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை சொற்பொழிவு நடைபெறும்.
இதில், உடுமலை சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

