/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீமாணிக்கவாசகர் உற்சவம் துவக்கம் வரும் 13ம் தேதி ஆருத்ரா தரிசன விழா
/
ஸ்ரீமாணிக்கவாசகர் உற்சவம் துவக்கம் வரும் 13ம் தேதி ஆருத்ரா தரிசன விழா
ஸ்ரீமாணிக்கவாசகர் உற்சவம் துவக்கம் வரும் 13ம் தேதி ஆருத்ரா தரிசன விழா
ஸ்ரீமாணிக்கவாசகர் உற்சவம் துவக்கம் வரும் 13ம் தேதி ஆருத்ரா தரிசன விழா
ADDED : ஜன 05, 2025 02:13 AM

திருப்பூர்: மார்கழி மாத பவுர்ணமி நாளில், சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக, எட்டு நாட்கள் மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம் நடைபெறும். அதன்படி, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம் நேற்று துவங்கியது.
மாணிக்கவாசகர், உற்சவர் எழுந்தருளி, கனகசபையில் வீற்றிருக்கும் அம்மையப்பர் மீது திருவெம்பாவை பாடி வழிபடுவதாக ஐதீகம். அதன்படி, கோவில் கனகசபை மண்டபம் நேற்று கோலமிட்டு அலங்கரிக்கப்பட்டது. சிறிய சப்பரத்தில், மாணிக்கவாசகர் எழுந்தருளி, கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்து, அம்மையப்பரை நோக்கி திருவெம்பாவை பாடும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.ஓதுவாமூர்த்திகள், மாணிக்கவாசகருக்கு உரிய இடத்தில் இருந்து, திருவெம்பாவை பதிகங்களை பாடினார்; சிவாச்சாரியார்களும், திருவெம்பாவை பதிகங்களை பாடி, மகாதீபாராதனை செய்தனர். இதேபோல், 11ம் தேதி வரை, தினமும் இவ்வழிபாடு நடக்கும்.
வரும் 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, விசாலாட்சியம்மன், விஸ்வேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவ விழா நடைபெறும். அன்றையதினம், வீடுகள் மற்றும் கோவில்களில், சுமங்கிலி பெண்கள் ஒன்றுகூடி, திருமாங்கல்ய நோன்பு வழிபாடு நடத்த உள்ளனர்.
ஆருத்ரா தரிசன விழாஸ்ரீநடராஜ பெருமான் - சிவகாமசுந்தரி அம்மனுக்கு, 13ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு மகா அபிேஷகமும், காலை, 6:00 மணிக்கு, ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும்.