/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
/
ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : மார் 20, 2024 11:07 PM

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, ஏழாவது வார்டு போயம்பாளையம் கிழக்கில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பொங்கல் விழா, கடந்த 15ம் தேதி பொங்கல் பூ சாட்டுடன் துவங்கியது. நேற்று காலை மாவிளக்கு, அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் உச்சிகால பூஜையை தொடர்ந்து, கம்பமும், கும்பமும் கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழா நிறைவாக ஸ்ரீ சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

