/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.எஸ்.ஐ., உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம்
/
எஸ்.எஸ்.ஐ., உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம்
ADDED : ஆக 07, 2025 03:17 AM

உடுமலை:குடிமங்கலம் எஸ்.எஸ்.ஐ., உடலுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
உடுமலை அருகே, வெட்டிக்கொல்லப்பட்ட குடிமங்கலம் எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல் உடல், திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின், உடுமலை வாஞ்சிநாதன் நகரிலுள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது.
அங்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், டி.ஐ.ஜி., சசிமோகன், எஸ்.பி., யாதவ்கிரிஷ் அசோக் உள்ளிட்ட அதிகாரிகள், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகள் சந்தியா, மகன் லக் ஷித்குமார் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின், எஸ்.எ ஸ்.ஐ., உடலை, போலீஸ் உயர் அதிகாரிகள் துாக்கி வந்து, இறுதி ஊர்வல வேனில் ஏற்றினர்.
உடல் ஊர்வலமாக வந்து, பொள்ளாச்சி ரோட்டிலுள்ள எரிவாயு மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு, '3 வேலிஸ் சல்யூட்' செலுத்தப்பட்டு, போலீசாரால், 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, தமிழக அரசு அறிவித்திருந்த, 1 கோடி ரூபாய் தொகையை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல் குடும்பத்தினரிடம் வழங்கினார்.