/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தேதி திடீர் மாற்றம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தேதி திடீர் மாற்றம்
ADDED : ஜூலை 20, 2025 06:50 AM
திருப்பூர் : முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் வருகை காரணமாக, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும், 22 மற்றும் 23ம் தேதிகளில், திருப்பூருக்கு முதல்வர் வருகை தர உள்ளார்.
இதனால், வெள்ளகோவில் நகராட்சி, உடுமலை - அந்தியூர் ஊராட்சி, அவிநாசி - சேவூர் மற்றும் முறியாண்டாம்பாளையம் ஊராட்சி, மடத்துக்குளம் - கடத்துார் ஊராட்சி, குண்டடம் - பெல்லம்பட்டி ஊராட்சி மற்றும் ஊத்துக்குளி - மொரட்டுப்பாளையம் ஊராட்சி ஆகியவற்றில் நடைபெறவிருந்த முகாம் அடுத்த மாதம், 2ம் தேதி நடைபெறும்.
அதேபோல், 23ம் தேதி, தாராபுரம், திருமுருகன்பூண்டி நகராட்சிகள், ருத்ராவதி பேரூராட்சி, குடிமங்கலம் - வீதம்பட்டி ஊராட்சி, தாராபுரம் - கோவிந்தாபுரம் ஊராட்சி, மூலனுார் - எரிசனம்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடக்கவிருந்த முகாம்கள் அடுத்த மாதம், 9ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது என, கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவித்துள்ளார்.