/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் துாரம்; மக்களுக்கு பாரம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் துாரம்; மக்களுக்கு பாரம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் துாரம்; மக்களுக்கு பாரம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் துாரம்; மக்களுக்கு பாரம்
ADDED : ஜூலை 14, 2025 12:59 AM
அவிநாசி; 'உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊராட்சிக்கு அருகில் நடத்தப்பட வேண்டும்; இல்லாவிட்டால், மக்கள் அலைக்கழிக்கப்படுவர்' என்று அவிநாசி தாலுகா பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறினர்.
அவிநாசி தாலுகாவில், 'உங்களுடன் முதல்வர் ஸ்டாலின்' முகாம் வரும் 15ம் தேதி துவங்கி ஆக., 14 வரை நடக்கிறது.
வரும் 25ம் தேதி தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அருகே ஆலத்துார் மற்றும் புஞ்சை தாமரைக் குளம் ஊராட்சிக்கு முகாம் நடைபெற உள்ளது. வரும் 31ம் தேதி சேவூர் சிவசக்தி மஹாலில் பாப்பாங்குளம் மற்றும் போத்தம்பாளையம் ஊராட்சிக்கும், ஆக., 12ம் தேதி தத்தனுார் ஊராட்சிக்கும் நடைபெறும்.
புஞ்சை தாமரைக்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவர் சரவணகுமார் மற்றும் போத்தம்பாளையம் மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் கூறியதாவது:
தற்போது முகாம் நடைபெறும் இடத்திற்கும் ஒவ்வொரு ஊராட்சிக்கும்,15 முதல் 20கி.மீ., துாரம் உள்ளது. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை கூட எடுத்துக் கூற முடியாத நிலையில் முகாமை, வெறும் கண் துடைப்புக்காக மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் நடத்துகின்றனர்.
இவ்வளவு துாரத்தில், முகாமை அமைத்தால், மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை பெறும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என அனைவருமே அலைக்கழிக்கப்படுவர். மாவட்ட நிர்வாகம் அந்தந்த ஊராட்சிக்கு அருகில் உள்ள மண்டபங்களில் முகாம்களை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முகாமை புறக்கணிப்போம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.