/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிமிர்ந்து நில்' திட்ட கூட்டம்; கல்வி நிறுவனத்தினர் பங்கேற்பு
/
'நிமிர்ந்து நில்' திட்ட கூட்டம்; கல்வி நிறுவனத்தினர் பங்கேற்பு
'நிமிர்ந்து நில்' திட்ட கூட்டம்; கல்வி நிறுவனத்தினர் பங்கேற்பு
'நிமிர்ந்து நில்' திட்ட கூட்டம்; கல்வி நிறுவனத்தினர் பங்கேற்பு
ADDED : செப் 04, 2025 11:51 PM

திருப்பூர்; தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) சார்பில், 'நிமிர்ந்து நில்' திட்டத்தில் அங்கம் வகிக்கும் கல்வி நிறுவனங்களுக்கான சந்திப்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசினார். இ.டி.ஐ.ஐ., மைய ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், 'நிமிர்ந்து நில்' திட்ட செயல்பாடுகள் மற்றும் கல்லுாரிகளின் பங்களிப்பு, படிக்கும்போதே தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து விளக்கம் அளித்தார்.
சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் திட்ட அலுவலர் காயத்ரி, நீலகிரி மாவட்ட திட்டமேலாளர் கோபால்சாமி ஆகியோர் விளக்கி பேசினர்.
இ.டி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட திட்ட மேலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.