/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.எஸ்.டி., பிரதமரின் தீபாவளி பரிசு
/
ஜி.எஸ்.டி., பிரதமரின் தீபாவளி பரிசு
ADDED : செப் 04, 2025 11:51 PM

கண்ணையன் (தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு) : மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி குறைப்பு அறிவிப்பு என்பது, நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்குமாக சிந்தித்து வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் துறையினர், பாமர மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மகிழ்ச்சியோடு இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணமாகும். அத்தியாவசிய பொருட்களான, எண்ணெய், சோப்பு, வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிக்குறைப்பு செய்தது வணிகர்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பயனளிப்பதாகும். சுகாதாரம், விவசாயம், தொழில்துறையினர், பொதுமக்கள் என, அனைத்து தரப்பினருக்குமாக தனித்தனியாக பட்டியலிட்டு, வரிக்குறைப்பு செய்தது, நாட்டு மக்கள் மீதான அக்கறையை காட்டுகிறது. பாராட்டத்தக்க நடவடிக்கையாக இதை கருதுகிறோம். மக்களுக்கான பிரதமர் என்பதை, மோடி மீண்டும் நிரூபித்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் தீபாவளி பரிசாக இதை வழங்கியுள்ளார். நாட்டு மக்கள் சார்பாகவும், வணிகர்கள் சார்பாகவும், மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.