/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில தடகள போட்டி; நாச்சம்மாள் பள்ளி அசத்தல்
/
மாநில தடகள போட்டி; நாச்சம்மாள் பள்ளி அசத்தல்
ADDED : ஜூலை 29, 2025 11:44 PM

திருப்பூர்; அவிநாசி, ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு மாணவன் தருண், மாநில அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டியில், கடந்த, 5 ஆண்டாக பங்கேற்று, இரண்டு மற்றும் நான்காம் இடங்களை பெற்று வருகிறார்.
அவ்வகையில், கரூர் வேலம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளியில் நடந்த, 2025 -2026 கல்வியாண்டிற்கான, 6வது சி.பி.எஸ்.இ., குழுமங்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று, 2ம் இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர், வரும் செப்., மாதம், உ.பி., வாரணாசியில் நடைபெறவுள்ள தேசிய தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவர் தருணுக்கு பள்ளியின் செயலர் அகஸ்யா விக்ரம், வாழ்த்து தெரிவித்து, பரிசு வழங்கினார். தருணை, சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

