/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில விளையாட்டு; 350 வீரர்கள் பங்கேற்பு
/
மாநில விளையாட்டு; 350 வீரர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 06, 2025 08:46 PM

உடுமலை; குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பில், மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடந்தது.
குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பில், '6வது டிரையம்ப் டிராபி' என்ற தலைப்பில், மாநில அளவிலான கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடந்தன.
திருப்பூர், ஈரோடு, கோவை, கடலுார் மற்றும் கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த அணிகள் பங்கேற்றனர். மொத்தமாக, 350 விளையாட்டு வீரர்கள் பல்வேறு சங்கங்களின் சார்பில் போட்டியில் கலந்து கொண்டனர். ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ஜூலியா தலைமை வகித்தார். ஆர்.வி.ஜி., கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சந்தோஷ் போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதன் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.
ஒவ்வொரு போட்டியிலும், முதல் நான்கு இடத்தில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

