/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில ஜூடோ போட்டி அரசுப்பள்ளி அசத்தல்
/
மாநில ஜூடோ போட்டி அரசுப்பள்ளி அசத்தல்
ADDED : ஜன 30, 2025 11:52 PM

திருப்பூர்: மாநில ஜூடோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாநில ஜூடோ போட்டி, நாகர்கோவில் சென்ஜான்ஸ் கலைஅறிவியல் கல்லுாரியில் நடந்தது.
மாநிலம் முழுதும் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பூர், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் ஸ்ரீ விக்னேஷ் தங்கம் வென்று அசத்தினர்; இதே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ரித்திஷ் முகமதுபாசித், ஸ்ரீ வசந்த் வெள்ளி வென்றனர். பத்தாம் வகுப்பு மாணவர் பிரவீன் வெண்கலம் கைப்பற்றினார்.
மாநில ஜூடோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார், உதவி தலைமை ஆசிரியர்கள் கர்னல், வசந்தாமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் புஷ்பவதி, ஆனந்தன், சுதாகர், முரளி மற்றும் பலர் பாராட்டினர்.