/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கபடி - கூடைப்பந்து அணி; திருப்பூர் வீரர் ஒருவரும் இல்லை
/
மாநில கபடி - கூடைப்பந்து அணி; திருப்பூர் வீரர் ஒருவரும் இல்லை
மாநில கபடி - கூடைப்பந்து அணி; திருப்பூர் வீரர் ஒருவரும் இல்லை
மாநில கபடி - கூடைப்பந்து அணி; திருப்பூர் வீரர் ஒருவரும் இல்லை
ADDED : அக் 11, 2024 11:55 PM
திருப்பூர் : இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், 68வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டி விரைவில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க உள்ள தமிழக (மாநில) அணி கபடி, கூடைப்பந்து அணி வீரர் தேர்வு, காங்கயம், நத்தக்காடையூர் பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரியில் செப்., 30ம் தேதி நடந்தது.
தமிழகம் முழுதும், 13 மண்டலங்களில் நடந்த போட்டியில் தேர்வான 104 பேர், மாநில அணித்தேர்வில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம் சார்பில், கோவை மண்டல அளவிலான அணியில், நான்கு பேர் பங்கேற்றனர்; ஆனால், ஒருவரும் தேர்வாகவில்லை.
விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகையில், ''மாநில எஸ்.ஜி.எப்.ஐ., கபடி அணிக்கு, 56 பேரில் இருந்து, உத்தேசமாக, 25 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களில் இருந்து, இறுதியாக, 14 பேர் தேர்வாகினர். அவர்களில் தகுதியானவர்களே களத்தில் விளையாட ஒப்புதல் வழங்கப்படுகிறது.
மாவட்ட தேர்வு, மண்டல தெரிவு போட்டிகளில் சாதிக்கும் நம் மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் மாநில தேர்வில் வெற்றி பெற, இன்னமும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நுணுக்கங்களை தெளிவாகவும், சிறப்பாகவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
'ஸ்கூல் கேம்ஸ் பெடேஷன் ஆப் இந்தியா' (எஸ்.ஜி.எப்.ஐ.,) தேசிய அணியை உருவாக்கும் பொறுப்பில் உள்ளது. மாநில அணிக்கேற்ப திறமையாக வீரர்கள் விளையாடினால் மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும்'' என்றனர்.

