/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கபடி; பங்கேற்க விருப்பமா?
/
மாநில கபடி; பங்கேற்க விருப்பமா?
ADDED : பிப் 14, 2024 11:59 PM
மாநில சப்-ஜூனியர் கபடி போட்டியில், பங்கேற்க விருப்பமுள்ள அணிகள், மாவட்ட அணித்தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தாழையூர், சாமி அகாடமியில் மாநில சப் ஜூனியர் கபடி போட்டி, 18ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட அணித்தேர்வு, வரும், 17ம் தேதி நடக்கிறது.
திருப்பூர், காங்கயம் ரோடு, மாவட்ட கபடி கழக மைதானத்தில் காலை, 9:00 மணிக்கு நடக்கும் மாவட்ட சப் ஜூனியர் அணி தேர்வில் பங்கேற்க, மாவட்ட கபடி கழகத்தில் பதிவு பெற்ற அணிகள் மற்றும் பள்ளி அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர், 2008, மார்ச், 19ம் தேதிக்கு பின் பிறந்திருக்க வேண்டும். 16 வயது உடையவராக, 55 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும். வயது சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என, திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் தெரிவித்துள்ளார்.

