/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உப்பின்றி சாயமிட அதிநவீன இயந்திரம்
/
உப்பின்றி சாயமிட அதிநவீன இயந்திரம்
ADDED : மார் 03, 2024 11:46 PM

திருப்பூர்;உப்பில்லாமல் சாயம் தோய்க்க உதவும் 'எர்பாடெக்' அதிநவீன ஜெர்மன் இறக்குமதி இயந்திரம் திருப்பூர் சாயத்தொழில் துறையினருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
சாயமிடுவது துவங்கிய போது, 1:20 என்ற விகிதத்தில், ஒரு கிலோ துணிக்கு, 20 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தும் விஞ்ச் இயந்திரத்தை 'எர்பாடெக்' நிறுவனம் அறிமுகம் செய்தது. பிறகு, 1:5 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கப்படும், 'சாப்ட்புளோ' டையிங் இயந்திரங்கள் வந்தன. திருப்பூர் 'நிட்டெக்' கண்காட்சியில், உப்பில்லாமல் சாயமிடும் தொழில்நுட்பத்தில் தயாரான இயந்திரங்கள் குறித்த வர்த்தக விசாரணை, அதிகம் நடந்துள்ளது.
'நிட்- பேப்' நிர்வாக இயக்குனர் பிரேம்குமார், 'எர்பாடெக்' நிறுவன நிர்வாக இயக்குனர் கிளாஸ் பெர்க்மென் ஆகியோர் கூறியதாவது:
பயன்பாட்டில் உள்ள சாப்ட்புளோ இயந்திரங்களுக்கு, ஐந்து மடங்கு தண்ணீர் பயன்படுத்த வேண்டும்; அதற்கு ஏற்ப ரசாயனங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், சரியான வகையில் கலர் வந்துள்ளதா என்பதை, 16 மணி நேரத்துக்கு பிறகே உறுதி செய்ய முடியும்.
'எர்பாடெக்' புதிய இயந்திரத்தில், உப்பு இல்லாமல் சாயமிடலாம்; மேலும், 1:1 என்ற விகித்தில் தண்ணீர் சேர்க்கலாம். புதிய தொழில்நுட்பத்தால், 25 நிமிடங்களில், சரியான கலர் வந்துள்ளதா என்பதை உறுதி செய்யலாம். பெருந்துறை 'சிப்காட்'டில் உள்ள தொழிற்சாலைகளில் புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படுவதால், கெமிக்கல் மற்றும் சாயத்தின் பயன்பாடும் குறையும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

