/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில விளையாட்டு போட்டி விருக் ஷா பள்ளி சாதனை
/
மாநில விளையாட்டு போட்டி விருக் ஷா பள்ளி சாதனை
ADDED : ஆக 02, 2025 11:32 PM

திருப்பூர்: மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விருக் ஷா சர்வதேச பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் விருக் ஷா சர்வதேச பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு மாடல் பென்டத்தலான் அசோசியேசன் சார்பில் நடந்த மாநில அளவிலான டெட்ரத்தலான் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 13 வயது பிரிவில், ஜீவித்குமார் முதலிடம்பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஹிமேஷ் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். மேலும் 17 வயது பிரிவில், வர்ஷிகா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
அதேபோல், டி.எம்.பி.ஏ., லேசர் ரன் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகளில், 17 வயது பிரிவில் ரஷிதா இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த சாதனை படைத்து, தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் ராஜலட்சுமி, பள்ளி தலைவர் கோவிந்தராஜன், பள்ளி முதல்வர் ேஹமலதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவத்தனர்.