/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில எறிபந்து போட்டி; 54 அணிகள் பங்கேற்பு
/
மாநில எறிபந்து போட்டி; 54 அணிகள் பங்கேற்பு
ADDED : அக் 24, 2024 09:31 PM
உடுமலை : தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் சார்பில், மாநில அளவிலான எறிபந்து போட்டிகள் நடக்கிறது. இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட எறிபந்து கழகத்தின் சார்பில், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனத்தில் சீனியர் பிரிவு ஆண்கள், பெண்களுக்கான எறிபந்து போட்டி நடந்தது.
போட்டிகளை பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி மற்றும் தமிழக எறிபந்து கழகத்தலைவர் பாலவிநாயகம் துவக்கி வைத்தனர். திருப்பூர் எறிபந்து கழக செயலாளர் தேவ்ஆனந்த் வரவேற்றார். ஜே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராஜ்குமார், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
மாநில அளவில் பல்வேறு மாவட்டத்திலிருந்து ஆண்கள் பிரிவில், 28 அணிகள், பெண்கள் பிரிவில், 26 அணிகள் பங்கேற்றன.
போட்டிகளில், ஆண்களுக்கான பிரிவில், கரூர் மாவட்ட அணி முதலிடமும், சென்னை அணி இரண்டாமிடமும், துாத்துக்குடி அணி மூன்றாமிடமும் பெற்றது. பெண்களுக்கான பிரிவில், திருவள்ளூர் மாவட்ட அணி முதலிடமும், திருப்பூர் மாவட்ட அணி இரண்டாமிடமும், கோவை மாவட்ட அணி மூன்றாமிடமும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.