ADDED : ஜன 03, 2026 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை ஒட்டி, தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில், மாநில கைப்பந்து போட்டி நேற்று முன்-தினம் துவங்கியது. நாளை வரை நடக்கிறது.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. முதலிடம் பிடிக்கும் முதல் நான்கு அணிகளுக்கு முறையே, 50 ஆயிரம், 40 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்ப-ரிசு மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடு-களை தாராபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலு உள்-ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.

