/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில இளையோர் தடகளம்; 'பிளாட்டோஸ்' சாதனை
/
மாநில இளையோர் தடகளம்; 'பிளாட்டோஸ்' சாதனை
ADDED : செப் 23, 2024 11:47 PM

திருப்பூர்: திருப்பூர் பிளாட்டோஸ் பள்ளி மாநில தடகள போட்டியில் சாதனை படைத்துள்ளது.
ஈரோட்டில், 38வது மாநில அளவிலான, மாவட்ட பள்ளிகளுக்கான இளையோர் தடகளப் போட்டிகள் நடந்தது.இதில் பங்கேற்ற திருப்பூர் பிளாட்டோஸ் பள்ளி, 16 வயது பிரிவு மிட்லி ரிலேவில், மாணவர் ெஷர்வின் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். அதே போல், பென்டத்தலானில் 16 வயது பிரிவில், மாணவி பிரேமா, 3,656 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற இருவரையும், பயிற்சியாளர்கள் சுரேஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோரையும், பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.