/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெண்ணெய் திருடிய கண்ணனின் மனதை கொள்ளையிடும் சிலைகள்
/
வெண்ணெய் திருடிய கண்ணனின் மனதை கொள்ளையிடும் சிலைகள்
வெண்ணெய் திருடிய கண்ணனின் மனதை கொள்ளையிடும் சிலைகள்
வெண்ணெய் திருடிய கண்ணனின் மனதை கொள்ளையிடும் சிலைகள்
ADDED : ஆக 10, 2025 02:42 AM

திருப்பூர் : குழல் ஊதியபடி, ஆநிரைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் தொழுவங்களுக்கு ஓட்டிச் செல்வது தான் கிருஷ்ண அவதாரத்தில், விஷ்ணுவின் பணியாக இருந்தது. மதுரா நகரில், வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாக அவதரித்த கிருஷ்ணன், அந்த அவதாரத்தில், கம்சன் என்ற கொடியவனை அழித்து, மக்களை காப்பாற்றி, தர்மத்தை நிலைநாட்டும் வகையில் அந்த அவதாரத்தை நிறைவு செய்தார்.
அவ்வகையில் வரும், 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தில், முக்கியமாக கிருஷ்ணரின் சிலைகள் இடம் பெறும். வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்களில், கிருஷ்ணரின் வித விதமான சிலைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதற்காக, தற்போது கடைகளில் கிருஷ்ணர் சிலைகள், மனதை அள்ளும் வகையிலான வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
---
திருப்பூரில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலைகள்.