/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருப்பு வைத்த வெங்காயம்; விற்பனை செய்ய தீவிரம்
/
இருப்பு வைத்த வெங்காயம்; விற்பனை செய்ய தீவிரம்
ADDED : நவ 28, 2024 06:26 AM
பொங்கலுார்; கடந்த வைகாசி பட்டத்தில் நடவு செய்த சின்ன வெங்காயம் அறுவடையின்போது கட்டும்படியான விலை கிடைக்கவில்லை. விலை கிடைக்காததால் விவசாயிகள் திறந்தவெளியில் பட்டறை அமைத்து இருப்பு வைத்தனர். விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனர்.
தற்பொழுது கார்த்திகை பட்ட சீசன் துவங்கியுள்ளது. கார்த்திகை பட்ட நடவு சீசனின் பொழுது விதை வெங்காய தேவை அதிகரித்து விலை உயர்வு ஏற்படுவது வாடிக்கை. இருந்தும் பெரிய அளவில் சின்ன வெங்காயம் விலை உயரவில்லை. இதனால் பட்டறையில் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனை செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறியதாவது: சின்ன வெங்காயம் கிலோ, 30 முதல் அதிகபட்சம், 45 ரூபாய் வரையே விலை போகிறது. இதை இரண்டு மாதங்கள் இருப்பு வைக்க முடியும். நீண்ட நாள் இருப்பு வைத்திருந்தால் எடை குறைந்து விடும். ராசிபுரம், துறையூர் பகுதிகளில் இருந்து புதிய வெங்காய வரத்து ஆரம்பிக்கும்.
பழைய இருப்பு வெங்காயம் முளைத்து விடும் வாய்ப்பு உள்ளது. புதிய வெங்காயம் வந்துவிட்டால் பழைய வெங்காயம் விலை குறைந்து விடும். இதனால், விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்த வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.