/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவையில் பதுக்கி திருப்பூரில் சப்ளை.. ஒரு டன் குட்கா பறிமுதல்; ஒருவர் கைது

ADDED : மார் 29, 2025 07:23 AM

பல்லடம்; கோவை மாவட்டத்தில் பதுக்கி வைத்து, திருப்பூர் மாவட்டத்தில் குட்கா சப்ளையில் ஈடுபட்டு வந்த வியாபாரி ஒருவரை கைது செய்த பல்லடம் போலீசார், ஒரு டன் குட்கா பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் கண்ணன், 34. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருகிறார். தகவல் அறிந்த பல்லடம் போலீசார், இவரை கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம், குட்கா பொருட்களை காரில் ஏற்றியபடி, பல்லடம் அடுத்த, கணபதிபாளையம், கள்ளிமேடு பகுதியில், விற்பனைக்காக கொண்டு சென்றார். இதனை கண்காணித்த போலீசார், விஜய் கண்ணனை கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணை மேற்கொண்டதில், இவர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் குடோன் அமைத்து, அதில், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் குட்கா பொருட்களுடன், சொகுசு கார் ஒன்றையும் பல்லடம் போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில் பதுக்கி வைத்து, திருப்பூர் மாவட்டத்தில் குட்கா சப்ளை செய்து வந்த இவருக்கு, குட்கா பொருட்கள் எங்கிருந்து மொத்தமாக கிடைக்கிறது. எங்கெல்லாம் சப்ளை செய்து வந்தார்; யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.