/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம்
/
முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம்
முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம்
முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம்
ADDED : அக் 10, 2025 10:57 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பை கழிவுகள் பெருமளவு அருகேயுள்ள பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்படுகிறது.
தற்போது, முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கடந்த மாதம் முதல் குப்பைகழிவுகள் கொண்டு சென்று கொட்டப்பட்டு வந்தது.
இந்த செயலுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டன. இவற்றையெல்லாம் கடந்து குப்பை கழிவுகள் பாறைக்குழியில் கொட்டும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.
இதற்கு எதிராக போராட்டம் நடத்திய திருப்பூர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்தன. இதன் மீது, நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி இவ்விவகாரத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தனது விளக்கத்தை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
அது வரை பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. வரும், 13ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவையடுத்து நேற்று பிற்பகல் முதல் முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் பணி நிறுத்தப்பட்டது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.