/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளக்காடானது ரோடு.. மிதந்தன வாகனங்கள்; சிறிய மழைக்கே பெரிய துன்பம்

ADDED : அக் 10, 2025 10:58 PM

திருப்பூரில் நேற்றுமுன்தினம் இடியுடன் கூடிய கனத்த மழையால், ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
குறிப்பாக, திருப்பூர், அவிநாசி ரோடு, காந்திநகர் சிக்னல் பகுதியில் ரோட்டில் மழைநீர், ஏரி போன்று தேங்கியது. ரோட்டில் பயணித்த கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி மிதந்தபடி பயணித்தன. ரோட்டோரம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த டூவீலர்கள், கவிழ்ந்தன.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஒவ்வொருமுறை மழையின் போதும், இந்த இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கும். தொடர் புகாரை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில், மழைநீர் தடையின்றி வெளியேற பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால், சரியான கட்டமைப்புடன் பாலம் அமைக்கப்படாததால் தான், சிறிய மழையின் போது கூட, ரோடு வெள்ளக்காடாக மாறுகிறது. சிறிய மழைக்கே, இத்தனை பெரிய பாதிப்பை எதிர்கொள் வேண்டிய நிலையில், பருவமழை தீவிரமடைந்தால் பெரும் சேதம் ஏற்படும்.
பருவமழை தீவிரமடையும் முன் சம்மந்தப்பட்ட துறையினர், மழைநீர் கட்டமைப்பில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும்,' என்றனர்.