/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வு எட்டப்படும் வரை வரி வசூலை நிறுத்துங்கள்; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வேண்டுகோள்
/
தீர்வு எட்டப்படும் வரை வரி வசூலை நிறுத்துங்கள்; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வேண்டுகோள்
தீர்வு எட்டப்படும் வரை வரி வசூலை நிறுத்துங்கள்; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வேண்டுகோள்
தீர்வு எட்டப்படும் வரை வரி வசூலை நிறுத்துங்கள்; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வேண்டுகோள்
ADDED : டிச 26, 2024 11:42 PM

திருப்பூர்; சொத்து வரி பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, வரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும், என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. சொத்து வரி உயர்வைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியுள்ளன.
மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள், மாநகராட்சி எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் நேற்று மேயர், கமிஷனர் ஆகியோரிடம் அளித்த மனு:
திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் கடந்த செப்., மாதம் முதல் மேலும், 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரையாண்டு துவக்கத்தில் இது செலுத்தாவிட்டால், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. கட்டட பிளான் அப்ரூவல் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றை ரத்து செய்ய கோரி அடுத்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.மாநகராட்சி சொத்து வரி உயர்வு கண்டித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தியும் இது வரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கான தீர்வு காணும் வரையில், சொத்து வரி வசூலை நிறுத்திவைக்க வேண்டும்.
மிகக்குறைவாக சிலர் வரி பாக்கி வைத்திருந்தால், உடனே சென்று, குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நிர்வாகம், அதுவே பெருந்தொகை பாக்கி வைத்துள்ளவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பெருந்தொகை பாக்கி பட்டியல் வெளியிடுங்க
நீண்ட காலமாக, பெருந்தொகை வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். மேலும் இது போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்து கட்சிகளின் கவுன்சிலர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும்.
குறிப்பாக, சொத்து வரி உயர்வு குறித்து விவாதித்து, அதனை ரத்து செய்வது தொடர்பாக, சிறப்பு கூட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கூட்ட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.