ADDED : ஆக 10, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
திருப்பூரில் போக்குவரத்து சீர்செய்யும் பணியின் போது, எஸ்.ஐ.,யை நாய் கடித்தது.
திருப்பூரில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. குடியிருப்பு பகுதியில் சுற்றும் தெருநாய்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை ரோட்டில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்கின்றது. வாகன ஓட்டுநர்களும் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
கே.வி.ஆர்., நகர் போக்குவரத்து ஸ்டேஷனை சேர்ந்த எஸ்.ஐ., ஜெயகுமார், 48 நேற்று காலை சக போலீசாருடன் மாநகராட்சி சிக்னல் அருகே போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்
ரோட்டில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று, திடீரென எஸ்.ஐ.,யின் கால் பகுதியில் கடித்தது. உடனே, அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.