/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய்கள் 'கொல வெறி': விரக்தியில் விவசாயிகள்
/
தெருநாய்கள் 'கொல வெறி': விரக்தியில் விவசாயிகள்
ADDED : அக் 13, 2024 05:51 AM

வெள்ளகோவில், மூலனுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆடுகளை கடித்தும், கன்றுக்குட்டிகளின் வாலை கடித்து துண்டித்தும், தெரு நாய்களின் அட்டகாசம் தொடர்வதால், மாற்று வழி தெரியாமல் கால்நடை வளர்ப்போர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், வெள்ளகோவில், மூலனுார் உள்ளிட்ட இடங்களில் வளர்ப்பு ஆடு, கோழி, கன்றுக்குட்டி போன்றவற்றை தெருநாய்கள் கடித்து, தாக்குகின்றன. இதனால், ஏராளமான ஆடுகள் இறந்துள்ளன. இறந்து போன ஆடுகளுக்கு இழப்பீடு கேட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று மட்டும் மூன்று இடத்தில் தெரு நாய்களின் தாக்குதலால் கால்நடைகள் இறந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தாராபுரம் வட்டம் மூலனுார் அருகில் முளையாம்பூண்டி, கருக்கம்பாளையம்புதுார் கிராமத்தில், மேய்ந்துக் கொண்டிருந்த, 8 மாத கன்றுக்குட்டியை தெரு நாய்கள் கடித்து, அதன் வாலை துண்டித்துள்ளன.காங்கயம் வட்டம் வீரணம்பாளையம், சூலக்கல்புதுாரில், சரசு என்பவரின் தோட்டத்தில், தெரு நாய் கடித்ததில் கன்றுக்குட்டி இறந்துள்ளது. வேலங்காட்டுபாளையத்தில் ஈஸ்வரன் என்பவரின் ஆடு, தெரு நாய்களால் கடிபட்டுள்ளது.இவ்வாறு, தெருநாய்களின் தாக்குதலால், கால்நடைகள் பலியாவதும், காயம்படுவதும் தொடர் கதையாகி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் மீது விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.
தெருநாய்களின் தாக்குதலால், கால்நடைகள் பலியாவதும், காயம்படுவதும் தொடர் கதையாகி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் மீது விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.