/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்
/
அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்
ADDED : பிப் 21, 2026 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், வரும் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தெருமுனை பிரசார கூட்டம் நேற்று நடந்தது.
காசி கவுண்டம்புதுார், வஞ்சிபாளையம், மங்கலம் ரோடு, பெரியாயிபாளையம், துலுக்கமுத்துார் நால்ரோடு, கருமாபாளையம் ஆகிய பகுதிகளில் நடந்த கூட்டத்துக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் தனபால் தலைமை வகித்தார்.
முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், தெற்கு ஒன்றிய பொருளாளர் காவேரி ரமேஷ், ஜெ. பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அமுதா மற்றும் பலர் பங்கேற்றனர்.
தலைமை பேச்சாளர்கள் முருகேசன், சபரீசன், கார்த்தீஸ்வரன் ஆகியோர் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர்.

