ADDED : ஜன 31, 2024 11:52 PM

திருப்பூர் : சாலையோர வியாபாரிகளுக்கு 'வெண்டிங்' கமிட்டி அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,இது குறித்து, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில் சங்கத்தினர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருப்பூர் தெற்கு உழவர் சந்தை பகுதியில் 150 மீ., தள்ளி சிறு வியாபாரிகள் சாலையோர கடையும், வாடகை கடைகளுக்கு முன்புறம் பொருட்களை வைத்தும் வியாபாரம் செய்கின்றனர். அதிகாலை நேரம், போக்குவரத்துக்கும், உழவர் சந்தை விற்பனைக்கும் பாதிப்பில்லாத வகையில் இவர்கள் கடை வைத்துள்ளனர்.
இந்த கடைகளை எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது. இது தொடர்பாக நிலவும் பிரச்னைக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஸ்ட்ரீட் வெண்டிங் கமிட்டி அமைத்து அதன்படி விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.