ADDED : மே 06, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி அறிக்கை: தாராபுரம் அருகே சாலை பணியில் தோண்டப்பட்ட மிகப் பெரிய பள்ளத்தினுள் மொபட்டில் வந்து விழுந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். உரிய பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் இந்த சம்பவமும், இழப்பும் நேர்ந்துள்ளது.
பணி நடைபெறும் இடத்தில் எந்த எச்சரிக்கையும், தடுப்பும், இரவு நேரம் வாகனங்கள் வரும்போது எச்சரிக்கும் வகையில் ரிப்ளக்டர்கள் என எந்த ஏற்பாடும் இல்லை. இதில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் தான் இதற்கு காரணம். இது போன்ற நிகழ்வு ஏற்படாத வகையில் எச்சரிக்கும் விதமாக உரிய அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

