/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை; நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

ADDED : ஏப் 02, 2025 10:14 PM
உடுமலை; உடுமலை நகராட்சி பகுதிகளில், மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால், இணைப்பு துண்டிப்பு, அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி எச்சரித்துள்ளது.
உடுமலை நகராட்சி கமிஷனர் சரவணகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
உடுமலை நகராட்சிக்குட்பட்ட, ஒன்று முதல், 33 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி சார்பில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, பொதுமக்கள் குடிநீர் குழாய் இணைப்பில், மின் மோட்டார்கள் பொருத்தி, குடிநீர் உறிஞ்சி வருவதாக தெரிகிறது. இதனால், சீரான குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது.
மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். தற்போது கோடை காலம் என்பதாலும், வரும் ஜூன் வரை வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதாலும், இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது, நகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் வினியோக உப விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் மோட்டார் பொருத்தி, குடிநீர் எடுப்பவர்களின் மின் மோட்டார் பறிமுதல் செய்து, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.