ADDED : ஜூன் 24, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், 17 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஜூலை 9ம் தேதி, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களும் திரளாக பங்கேற்க உள்ளனர்.
தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில், பின்னலாடை நிறுவனங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்ய வேண்டும். அதன்படி, தொழில் அமைப்புகள் வாரியாக, வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். தொழிற்சங்கங்கள் அனுப்பியுள்ள கடிதத்தை ஏற்று, தொழில் அமைப்புகளும், பொது வேலை நிறுத்த போராட்டம் குறித்து ஆலோசித்து வருகின்றன. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

