/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்திரம் வழங்க இழுத்தடிப்பு நிதி நிறுவனம் முன் போராட்டம்
/
பத்திரம் வழங்க இழுத்தடிப்பு நிதி நிறுவனம் முன் போராட்டம்
பத்திரம் வழங்க இழுத்தடிப்பு நிதி நிறுவனம் முன் போராட்டம்
பத்திரம் வழங்க இழுத்தடிப்பு நிதி நிறுவனம் முன் போராட்டம்
ADDED : செப் 22, 2024 05:54 AM
அனுப்பர்பாளையம், : ஈரோடு மாவட்டம், செண்பகப்புதுாரை சேர்ந்தவர் கனகராஜ்; மனைவி மல்லிகா; கூலி தொழிலாளர்கள்.
இவர்களது மகன் கணேஷ், 25. திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொழில் செய்வதற்காக தங்களது நில பத்திரத்தை அடமானமாக வைத்து மூன்று லட்சத்து, 51 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
கணேஷ், தான் வாங்கிய கடனை மாதாந்திர தவணையாக ஆறு மாதத்தில் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கடனை செலுத்திய நிலையில், கணேஷ் நில பத்திரத்தை கேட்டபோது, இரண்டு நாட்களில் பத்திரம் வழங்கப்படும் என தனியார் நிறுவனம் தரப்பில் உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் சொத்து பத்திரம் வழங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.
இதனை கண்டித்து, கணேஷ் மற்றும் அவரது தாய் மல்லிகா ஆகியோர் நேற்று நிதி நிறுவனம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவம் குறித்து, கணேஷ் மற்றும் நிதி நிறுவன ஊழியர் என இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.