/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியர் மோதல்; இன்று கவுன்சிலிங்
/
மாணவியர் மோதல்; இன்று கவுன்சிலிங்
ADDED : ஜூன் 26, 2025 11:40 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவியர்; பல்லடம் ரோடு, டி.கே.டி., மில் ஸ்டாப் அருகே உள்ள ஒரு அரசு பள்ளி மாணவியர் இடையே இன்ஸ்டாகிராம், குழுவில், கருத்து மோதல் ஏற்பட்டது. கடந்த, 24ம் தேதி மாநகராட்சி பள்ளி மாணவியரில் சிலர் பஸ் ஏறி, பத்து கி.மீ., துாரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரு பள்ளி மாணவியரும் சாலையில் இறங்கி, சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டனர்; பொதுமக்கள், அவ்வழியாக சென்றவர் தடுத்தும் சண்டை தீர்ந்தபாடில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், விவகாரத்தை சிலர் வீடியோ எடுத்து பதிவிட, சமூக வலைதளங்களில் வைரலானது.இவ்விவகாரத்தில் இடம் பெற்றுள்ள அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவியர் விபரங்களை தலைமை ஆசிரியர்கள் சேகரித்து, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து கூறுகையில், 'மாணவியர் கல்வி பாதிக்கக்கூடாது; கவனம் இவ்வாறு சிதறக்கூடாது என்பதால், அவர்களுக்கு கவுன்சிலிங் தர பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று (27ம் தேதி) மாணவியரின் பெற்றோரை வரவழைத்து, அவர்களுக்கு இது குறித்து தெரிவித்து, தக்க அறிவுரைகள் வழங்கப்படும்,' என்றார்.