/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரைட் பப்ளிக் பள்ளியில் மாணவ மன்றம் பதவியேற்பு
/
பிரைட் பப்ளிக் பள்ளியில் மாணவ மன்றம் பதவியேற்பு
ADDED : ஜூலை 15, 2025 10:42 PM

திருப்பூர்; திருப்பூர் -- - காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவில் உள்ள, பிரைட் பப்ளிக் பள்ளியில் மாணவ, -மாணவியர் பதவியேற்பு விழா நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினராக அன்பு அறக்கட்டளையின் தலைவர் மோகன், உப தலைவர் உத்தமன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், அறங்காவலர்கள் நடராஜன், சிவலிங்கம் பங்கேற்றனர். ஜனநாயக முறைப்படி மாணவர்கள் தங்கள் தலைவர்களை, தாங்களே தங்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுத்தனர். அதன் வாயிலாக, மாணவர் தலைவராக ஹரிஷ், உதவி தலைவராக மாணவி குழலி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கென ஒவ்வொரு பொறுப்புகள் வழங்கப்பட்டன. துறையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களும் உறுதிமொழி ஏற்று வாக்குறுதி அளித்தனர். விழாவை பள்ளியின் துணை முதல்வர் திலகவதி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.