/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளியில் மாணவர் மன்றம் பதவியேற்பு
/
ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளியில் மாணவர் மன்றம் பதவியேற்பு
ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளியில் மாணவர் மன்றம் பதவியேற்பு
ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளியில் மாணவர் மன்றம் பதவியேற்பு
ADDED : ஜூலை 05, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்ற தலைவர், துணைத்தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.
விழாவுக்கு ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் வரவேற்றார். திருப்பூர் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் வீரராஜ், திருப்பூர் தெற்கு ரோட்டரி தலைவர் தமிழரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். முன்னதாக, கலை, சுற்றுச்சூழல், அறிவியல், ஆங்கில மற்றும் விளையாட்டு மன்றங்களின் தலைவர்கள், துணை தலைவர்கள் பதவியேற்று கொண்டனர்.