/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கதிரவன் மெட்ரிக் பள்ளியில் மாணவ மன்றம் பதவியேற்பு
/
கதிரவன் மெட்ரிக் பள்ளியில் மாணவ மன்றம் பதவியேற்பு
ADDED : ஜூலை 20, 2025 06:51 AM

திருப்பூர், : மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 2025 - 2026ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் நடந்தது.
மாணவி வைஷ்ணவி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி முதல்வர் வசந்தி, பங்கேற்று, கொடியேற்றி துவக்கி வைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவ தலைவராக சரத், மாணவியர் தலைவியாக ரஷ்யா பேகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்கள் உட்பட விளையாட்டு, கல்வி, ஒழுக்கம், சுகாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பிரிவுகளுக்கும், அணி தலைவர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவி அனீஸ், நன்றி கூறினார்.