ADDED : ஏப் 18, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம் பாளையம் ஊராட்சி, மொய்யாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்; கூலி தொழிலாளி.
இவரது மகன் சங்கர், 15; மலையம் பாளையம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளியில் இருந்தபோது, வயிற்று வலியால் அவதிபட்டுள்ளார். ஆசியர்கள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளி சென்ற தந்தை மகன் சங்கரை அழைத்து கொண்டு, பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனை அருகே சென்றபோது, மாணவன் மயங்கி விழுந்து இறந்தான். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

