ADDED : மார் 01, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் நகராட்சி 1வது வார்டு, காமராஜபுரத்தில் ஆதி திராவிடர் நல வாரியம் சார்பில் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இடித்து அகற்றி புதிய விடுதி கட்ட முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின், பி.எம்.ஏ.ஜெ.ஒய்., திட்டத்தில் 1.5 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் 50 மாணவர்கள் தங்கும் வகையில், இரு தளங்களாக விடுதி கட்டப்படுகிறது. மொத்தம் 9,279 சதுரடி பரப்பில் வளாகம் அமைகிறது. மத்திய சமூகநீதி துறை அமைச்சர் வீரேந்திர குமார், காணொலி காட்சி வாயிலாக டில்லியிலிருந்து இப்பணிக்கான அடிக்கல் நாட்டினார். தாராபுரம் நகர தி.மு.க., செயலாளர் முருகானந்தம், தாட்கோ செயற்பொறியாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தனர்.

