நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் அடுத்த, வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் ஊழியர் ஒருவரின் மகன், அரசுப் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார்.
இரண்டு தினங்களுக்கு, மாணவனின் தந்தை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, ஆயிரம் ரூபாய் பணம் மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தேகம் அடைந்த மாணவனின் தந்தை, மாணவனைத் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவன், பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய பின், வீட்டுக்குச் செல்லாமல் மாயமானார்.
இதுகுறித்து பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள், வீட்டில் அருகேயுள்ள அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை திட்டியதால், 13 வயதான மாணவன் மாயமான சம்பவம், வடுகபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.