/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊழலுக்கு எதிராக மாணவர் முழக்கம்
/
ஊழலுக்கு எதிராக மாணவர் முழக்கம்
ADDED : டிச 09, 2024 11:50 PM
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில், ''லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், லஞ்சம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
'ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் ஒன்றிணைதல் மற்றும் நாளைய ஒருமைப்பாட்டை உருவாக்குதல்,' எனும் தலைப்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணா மூர்த்தி, செர்லின், நவீன்குமார் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.