/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவன் தற்கொலை விவகாரம்: சக மாணவரிடம் விசாரிக்க திட்டம்
/
மாணவன் தற்கொலை விவகாரம்: சக மாணவரிடம் விசாரிக்க திட்டம்
மாணவன் தற்கொலை விவகாரம்: சக மாணவரிடம் விசாரிக்க திட்டம்
மாணவன் தற்கொலை விவகாரம்: சக மாணவரிடம் விசாரிக்க திட்டம்
ADDED : ஜன 06, 2025 02:45 AM

திருப்பூர்; கோவை கல்லுாரி மாணவன் தற்கொலை செய்த விவகாரத்தில், சக மாணவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.
திருப்பூர், ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் சத்யநாராயணன், 21; கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். பிறந்த நாளான கடந்த 3ம் தேதி வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அன்று இரவு நீண்ட நேரம் தாயிடம் பேசிவிட்டு துாங்க சென்றவர், அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மொபைல் போனை பெற்றோர் பார்த்த போது, மகன் அழுதபடி ஆடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். மூன்று மாணவர்கள் அவரை 'பிராங்க்' செய்து தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்தது தெரிந்தது.  ஆடியோவை கைப்பற்றி நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். கல்லுாரி நிர்வாகத்தினர் இதுதொடர்பாக மூன்று மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், ''மாணவன் தற்கொலை விவகாரத்தில், வகுப்பில் எந்த மாதிரி மாணவனை கிண்டல் செய்தனர் என்பது குறித்து சக மாணவர்களிடம் விசாரிக்க உள்ளோம். மூன்று மாணவர்களை முதல் கட்டமாக 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவர்களை கல்லுாரியில் இருந்து நீக்க கல்லுாரி நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர். வகுப்பில் நடந்தவற்றை தெரிந்த பின், மூன்று மாணவர்களையும் அழைத்து விசாரிக்க உள்ளோம்.
தற்கொலை செய்த மாணவர், கிண்டல் காரணமாக கடுமையாக மனமுடைந்து, அதை கடந்து செல்ல முடியாமல் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். மூன்று பேரிடம் விசாரித்த பின், அவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

