/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துப்பாக்கி சுடும் போட்டி வெள்ளி வென்ற மாணவி
/
துப்பாக்கி சுடும் போட்டி வெள்ளி வென்ற மாணவி
ADDED : மே 14, 2025 11:51 PM

திருப்பூர்'டும் போட்டியில், பிளாட்டோஸ் அகாடமி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தேசிய அளவில் நடந்த, 18 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட 'கேலோ இந்தியா' போட்டி, டில்லியில் நடந்தது. போட்டியில் திருப்பூர் பிளாட்டோஸ் பள்ளி மாணவி தனிஷ்கா செந்தில்குமார் பங்கேற்று, வெள்ளி வென்று, திருப்பூர் மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், தனிஷ்காவுக்கு பாராட்டு தெரிவித்தார். பள்ளி அறங்காவலர் கிறிஸில்டாலோபஸ், முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவியை பாராட்டினர்.