/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிதிலமடைந்த ரோட்டினால் விபத்துக்குள்ளாகும் மாணவர்கள்
/
சிதிலமடைந்த ரோட்டினால் விபத்துக்குள்ளாகும் மாணவர்கள்
சிதிலமடைந்த ரோட்டினால் விபத்துக்குள்ளாகும் மாணவர்கள்
சிதிலமடைந்த ரோட்டினால் விபத்துக்குள்ளாகும் மாணவர்கள்
ADDED : ஜன 07, 2025 10:53 PM

உடுமலை; உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில், அரசுப்பள்ளிக்கு செல்லும் ரோடு மோசமாக இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை ஒன்றியம் போடிபட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி வளாகத்தில், உடுமலை வட்டார மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பகல்நேர பாதுகாப்பு மையமும் செயல்படுகிறது.
அங்கு பிரதான ரோட்டிலிருந்து இப்பள்ளிக்கு செல்லும் ரோடு மோசமாக இருப்பதால், மாணவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். ரோடு கற்கள் பெயர்ந்தும், அதிகமான குழிகளாகவும் உள்ளது.
காலை நேரத்தில் சைக்கிளில் வரும் மாணவர்கள், சிறிது வேகத்துடன் வந்தாலும் சறுக்கி கீழே விழும் நிலையில் ரோடு உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை, இந்த பாதையில் அழைத்து வருவதற்கும் பெற்றோர் சிரமப்படுகின்றனர்.
மழைநாட்களில் ரோட்டின் நிலை மேலும் மோசமாவதால், மாணவர்களை விடுவதற்கு பெற்றோரும் உடன் வரவேண்டியுள்ளது. மேலும், இப்பகுதியில் ரேஷன்கடையும் செயல்படுகிறது.
அங்கு வரும் மக்களும், சிதிலமடைந்த ரோட்டினால் பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகளும், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும்போது குழிகளில் தடுமாறி விழுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் இந்த ரோட்டை சீரமைக்க, வேண்டுமென பெற்றோர், அப்பகுதி மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

