/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வினாடி - வினா போட்டி மாணவர்கள் ஆர்வம்
/
வினாடி - வினா போட்டி மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஆக 31, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருப்பூர் தெற்கு கிளை சார்பில், துளிர் வினாடி வினா போட்டி, பெரிச்சிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.
கிளை தலைவர் சுதா, தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இளவரசி, மாவட்ட பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் செல்வராஜ், வரவேற்றார். மாவட்ட செயலாளர் கவுரிசங்கர் பேசினார்.
விழாவில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, போட்டியை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் சந்தோஷ், கனகராஜா, ரவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
போட்டியில், பல்வேறு பள்ளிகளில் இருந்து, 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

