/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காகிதப்பை தயாரித்து மாணவர்கள் விழிப்புணர்வு
/
காகிதப்பை தயாரித்து மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 13, 2025 01:23 AM

திருப்பூர் :திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2, மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் வடக்கு சார்பில், உலக காகிதப்பை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். இளநிலை உதவியாளர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். உதவியாளர் செல்வகுமாரி தலைமை வகித்தார். அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பங்கேற்று பேசினார்.
மாணவ செயலர்கள் செர்லின், ரேவதி, லட்சுமிகாந்த், தீபன் சந்தோஷ், தீபாஸ்ரீ, பிரியங்கா தலைமையில் மாணவ, மாணவியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி காகிதப்பைகளை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மொத்தம் 2,700 காகிதப்பைகள் தயாரிக்கப்பட்டன.