/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறன்களை வெளிக்கொணரும் கலை விழா; மாணவியர் உற்சாகம்
/
திறன்களை வெளிக்கொணரும் கலை விழா; மாணவியர் உற்சாகம்
திறன்களை வெளிக்கொணரும் கலை விழா; மாணவியர் உற்சாகம்
திறன்களை வெளிக்கொணரும் கலை விழா; மாணவியர் உற்சாகம்
ADDED : அக் 09, 2025 12:09 AM

திருப்பூர்; ''கலைத்திருவிழாக்கள் மாணவ, மாணவியரின் புதைந்துகிடக்கும் திறன்களை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பு'' என்று மாணவியர் தெரி வித்தனர்.
தமிழ்நாடு உயர்கல்வி மன்றம், தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லுாரிகளுக்கு 30க்கும் மேற்பட்ட போட்டிகளைக் கொடுத்து 30 வகையான போட்டிகள் நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளது.
போட்டிகளை நடத்த ஒவ்வொரு அரசு கலைக்கல்லுாரிக்கும் 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த செப். 16 முதல் அரசு கலைக்கல்லுாரிகளில் 30 வகை போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று திருப்பூர்எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் தனிநபர் நடனம், தனிநபர் பாடல், குழு நடனம் என மூன்று போட்டிகள் நடந்தன.
கல்லுாரி முதல்வர் தமிழ்மலர் தலைமை வகித்தார். 100க்கும் மேற்பட்ட மாணவிகள்போட்டிகளில் கலந்து கொண்டனர்.
கலைத்திருவிழா குறித்து மாணவியர் நம்முடன் பகிர்ந்தவை:
விந்தியா: இத்தகைய நிகழ்வுகள் பயனுள்ளதாக இருக்கிறது. புதைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. மேடை அச்சத்தைப் போக்குகிறது.
பிரியா: எங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறன்களை வெளிப்படுத்த உதவு கிறது. பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல் வாயிலாக பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பாக பயனுள்ள வகையில் நிகழ்வு இருக்கிறது.
அஸ்வினி பிரியா: எந்நேரமும் படிப்பில் இருப்பதை விடுத்து இம்மாதிரியான நிகழ்வில் பங்கேற்கும்போது மனஅழுத்தம் குறைகிறது. சாதிக்கக்கூடிய மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. ஆடல், பாடல் சார்ந்த போட்டிகள் மாணவர்களை சினிமா, ரேடியோ, நடனம் போன்ற துறைக்கு கொண்டு செல்லும் கருவியாக இருக்கிறது.
காவ்யா: மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இம்மாதிரியான நிகழ்வுகள் உதவுகின்றன. அரசு சார்பில் கொடுக்கப்படும் சான்றிதழ்கள் பிற்காலங்களில் பயனளிக்கும்.
சுமையா: இது மாணவர்களுக்கான நாளாக இருக்கிறது. இம்மாதிரியான நிகழ்வில் பங்கேற்கும்போது தான் திறமையானவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பதற்றம், பயம் போக்கிக்கொண்டு முந்திச்செல்ல முடியும்.
அவர்களின் வெற்றிப்பயணத்திற்கு இது ஒரு படியாக அமைகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நிகழ வேண்டும்.